tamilnadu

img

ரப்பர் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் வசந்தகுமார் வாக்குறுதி

நாகர்கோவில், ஏப். 7 -

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எச்.வசந்தகுமார் சனிக்கிழமை ஞாறாம்விளை பகுதியில் தேர்தல்பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஜனநாயகத்திற்கே ஆபத்து. மோடிஇந்தியாவை ஆண்ட வரையில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டார். அது அமைச்சரவையாக இருந்தாலும்சரி, ஆட்சியாக இருந்தாலும் சரி. அவர் ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுக்கவில்லை. எனவே மோடி அரசு மத்தியில் இருந்து நீக்கப்பட வேண்டும். நாங்கள் கொள்கை ரீதியாகநின்று போராடுகிறோம். நல்லது செய்வோம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கிறோம். அதை கொண்டுதான் தேர்தலில் போட்டியிடுகிறோமே தவிர பணத்தை வைத்துஅல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6000 ரூபாய் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். குமரியில் மூடிக் கிடக்கும் முந்திரி தொழிற்சாலைகளை திறக்கவும், ரப்பர் தொழிலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், வட்டாரச் செயலாளர் ஜெயராஜ், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ், காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரச்சார பயணம், திக்குறிச்சி, சிதறால், அருமனை, புண்ணியம், இடைக்கோடு, புத்தன்சந்தை, பரக்குன்று, மேல்புறம், குழித்துறை, படந்தாலுமூடு, வெட்டுவெந்நி மற்றும் சுற்று வட்டாரங்களில் நடைபெற்றது.