tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர் வாயிற்கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 5- தமிழக அரசு போக்குவரத்து தொழிலா ளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வலியுறுத்தி பணிமனைகள் முன்பு நடைபெறவுள்ள காத்திருப்பு போராட் டத்தை விளக்கி நாகர்கோவில் மீனாட்சி புரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணி மனை முன்பு வாயிற்கூட்டம் நடைபெற் றது. கூட்டத்திற்கு, சிஐடியு நிர்வாகி பகவதி யப்பன் மற்றும் தொமுச நிர்வாகி தங்கச்செழி யன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி தொமுச பணி மனை செயலாளர் சிதம்பரம், சிஐடியு செய லாளர் ஜான்ராஜன், சிஐடியு மாவட்ட உத வித்தலைவர் பொன்.சோபனராஜ் ஆகி யோர் பேசினர்.  இதில், அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.