tamilnadu

img

ஊராட்சித் தலைவர்களின் அதிகாரம் பறிப்பு மாவட்ட ஆட்சியர் தலையிட வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூலை 11- குமரி மாவட்டத்தில் ஊராட்சி தலைவருக்கான அனைத்து அதிகா ரங்களையும் மீண்டும் வழங்கக் கோரி குமரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: குமரி மாவட்டத்தில் ஊராட்சி  அமைப்புகளுக்கான பதினான்கா வது மானிய திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகள், ஜல் ஜீவன் என்ற திட்டத்தின் கீழ் அனைவ ருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணி மாவட்ட வளர்ச்சி முகமையில் நடைபெற உள்ளது. இது தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் அதிகா ரத்தையும், உள்ளாட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தையும் பறிக்கும் செயலா கும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஊராட்சி தலைவருக்கான முழுமை யான அதிகாரம் வழங்கப்பட வேண் டும் என அதில் கூறப்பட்டுள்ளது.