கார்ப்பரேட் நலன்களை மைய ப்படுத்தி மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக ளால் கன்னியாகுமரி மாவட்ட மக்க ளுக்கு தங்கள் சொந்த நிலங்கள் மீதான உரிமைகள் பறிக்கப்படுவது டன் வாழ்வாதாரமே கேள்விக்குறி யாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ கத்தில் இதர மாவட்டங்களை ஒப்பி டும்போது சிறிய மாவட்டமாகும். பரப்ப ளவில் 1672 ச.கி.மீ கொண்ட இந்த மாவட்டத்தில் சுமார் 33 சதவீதம் அடர்ந்த காடுகள் ஆகும். சுமார் 71 ச.கி.மீ கடற்கரை உள்ளது. 48 மலை கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் சரிபாதி நிலப்பரப்பில் விவசாயம் நடை பெற்று வருகிறது. இது நெருக்கமான குடியிருப்பு பகுதிகளைக் கொண்டது. அதாவது ஒரு ச.கி.மீ பரப்பளவில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1119 பேர் வரை வாழ்கின்றனர். எனவே குடியிருப்பு பகுதி மிகவும் பற்றாக்குறையாக உள்ள மாவட்டம் ஆகும் 2004 ஆம் ஆண்டு பேரழிவை உருவாக்கிய சுனாமி, 2017 ஆம் ஆண்டு ஓகி புயலின் தாக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் கடல் ஆக்கிரமிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் கடற்கரை மக்கள் வாழ வழியின்றி இடம் பெயர வேண்டிய தேவை ஏற்பட் டுள்ளது. மேலும் கடற்கரையில் மத்திய அரசின் திட்டங்கள் பன்னாட்டு கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மேற் கொள்ளப்படுகிறது.
இன்று 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் |
மத்திய, மாநில அரசுகள் குமரி மாவட்டத்தில் நடைமுறைபடுத்த உத் தேசித்துள்ள சூழலியல் அதிர்வு தாங்குமண்டலம் என்ற ஆபத்தான திட்டத்தினை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.இப்பிரச்சனையில் அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்கள் போராட தயாராகும் வகையிலும் ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத்தில் 100 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. |
இதனால் உள்நாட்டு மீனவர்கள் தொழில் இன்றி அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் உள்ள விவசா யத்தின் ஒரு பெரும் பகுதி மலை அடி வாரங்களில் நடைபெறுகிறது. எப்படி கடற்கரை மேலாண்மை சட்டம் கடற் கரை மக்களின் வாழ்வை பறிக்கின் றதோ, அதே போன்று ஏற்கனவே மாவட்டத்தின் வடபகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பட்டா நிலத்தை தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் வனத்துறையினர் அப கரித்து விட்டனர். இதனால் விவசாயிகள் மட்டு மன்றி குடியிருப்பு பகுதிகளும் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. ரப்பர் மரங்கள் சியாட்டம் வெட்ட முடியவில்லை. பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மத்திய, மாநில அரசுகள் சூழலியல் தாங்குமண்டலம் என்ற கூர் வாளை மக்கள் தலையில் வைத்துள்ளது.
கருத்து கேட்காமலே அமலாக்கம்
கொரோனா காலத்தை பயன் படுத்தி பல்வேறு வகையான மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக அமல்படுத்தி வருகின்றன. பொது மக்கள், அரசியல் கட்சிகள், அறிஞர் கள், சட்ட வல்லுநர்கள், விடுதலை போராட்ட தியாகிகள் உட்பட யாரு டைய கருத்தையும் கேட்காத அரசு களாக உள்ளன. கன்னியாகுமரி மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்களின் வாழ்வாதாரப் பகுதி கள் குறைந்து வரும் இச்சிறிய மாவட்டத்தில் கடையால், திற்பரப்பு, தும்பகோடு, பொன்மனை, சுருளோடு, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகியபாண்டிபுரம், செண்பகரா மன்புதூர், தோவாளை, ஆரல்வாய் மொழி, தேரூர், மருங்கூர், குலசேக ரம் உள்ளிட்ட 17 வருவாய் கிராமங்க ளில் பெரும்பகுதி மக்களின் பயன் பாட்டிலிருந்து பறிக்கும் வகையில் சுழ லியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கும் திட்டத்தினை வனத்துறை யும், மாவட்ட நிர்வாகமும் அறி வித்தன.
கடும் எதிர்ப்புகள் கிளம்பிய தால் இது பற்றி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலை வர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 2019 -செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெற்றது. கருத்து கேட்பு கூட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்கள் மேலும் சில சட்டமன்ற உறுப்பி னர்கள், தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர் கள் சுழலியல் தாங்கு மண்டலம் அமைக்கும் அரசாணையை வாபஸ் வாங்க வேண்டுமென்று முறையிட்ட னர். நிறைவுரை ஆற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் இம்முடிவை நாங் கள் தன்னிச்சையாக எடுக்க மாட்டோம். அரசாணையை தமிழாக்கம் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதுடன், கிராம, நகர ஊராட்சி களிலும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துவோம் என்று உறுதி யளித்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் ஒத்துக்கொண்டபடி ஆட்சேபனைக்கு எந்த பதிலும் சொல்லாமலும், கிராம வாரியாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமலும், தன்னிச்சை யாக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கும் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளில் அரசும், வனத்துறையும் துவங்கியுள்ளதாக தெரிகிறது.
சூழியல் அதிர்வு தாங்கு மண்டலம்
குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் செயல் படும் புலிகள் சரணாலய எல்லையை குமரி மாவட்டத்தின் வனப்பகுதிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இது போல் வனவிலங்குகள் குறிப்பாக காட்டுபன்றி, குரங்குகள் விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் துவம்சம் செய்து வருகின்றன. இத னால் மலையோர பகுதிகளில் பலநூறு ஆண்டுகளாக 46 காணி செட்டில் மெண்டுகளில் வசித்து வரும் மலை வாழ் மக்களின் நிலை பரிதாபகரமாக மாறுகிறது. அவர்கள் முழுக்க முழுக்க காடு களையும், மலையையும் நம்பி வாழ்ப வர்கள். அரசு அறிவிப்புபடி பாயிண்டு சீரோவிலிருந்து ஆரம்பித்தாலும் இம்மக்கள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் பகுதிக்குள்ளேதான் சிறை படுவர். வாழ முடியாத நிலையில் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு அகதிகளாக மாறுவர். தனியார் வனப்பாதுகாப்பு சட்டம் விவசாயிகள் நிலத்தை அபகரித்தது போல் மேலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நிலம் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் பறிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக இவ்வித முடிவுகள் குமரி மாவட்ட வரைபடத்தில் சரிபாதி காணாமல் போய்விடும்.