tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குக! மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்/திருநெல்வேலி/தூத்துக்குடி, ஜூன் 16- மத்திய-மாநில அரசுகள் நாட்டு மக்களை வறுமையிலிருந்து பாது காக்க அனைத்து ஏழை, நடுத்தர  குடும்பங்களுக்கும் 6 மாத கால த்திற்கு மத்திய அரசு 7500 ரூபா யும், மாநில அரசு 5 ஆயிரம் ரூபா யும் மாதந்தோறும் ரொக்கமாக வழங்க வேண்டும். வீதிகளில் நிர்க்க தியாக உள்ள புலம்பெயர் தொழி லாளர்கள் அனைவருக்கும் அவர்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல  உணவு, குடிநீர் மற்றும் போக்குவ ரத்து வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கும் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவ ருக்கு தலா 10 கிலோ உணவு தானி யம் வீதம் 6 மாத காலத்திற்கு இல வசமாக வழங்க வேண்டும். தினமும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி செவ்வா ய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  இதையொட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவ ட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நித்திரவிளை, காஞ்சாம்புறம், வில்லுக்குறி, திருவட்டார், தக்கலை, பத்மநாபபுரம், குளச்சல், கருங்கல், தொலையாவட்டம், கொல்லங்கோடு, குழித்துறை, மேல்புறம், குலசேகரம், தாழா க்குடி, பள்ளம் உட்பட 300-க்கும்  மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.நூர்முகமது பங்கேற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய ற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, வட்டார செயலாளர் கே.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், ஆர்.லீமாறோஸ், என்.அண்ணாதுரை, ஏ.வி.பெ ல்லார்மின், என்.எஸ்.கண்ணன், கே.மாதவன், என்.உஷாபாசி, எஸ். ஆர்.சேகர், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் மாவட்டகுழு உறுப்பினர்கள், வட்டார செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
நெல்லை மற்றும் தென்காசி  மாவட்டங்களில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. பாளையங்கோ ட்டை, மேலப்பாளையம், குறிச்சி, முகிலில் சிபிஎம் அருணா தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. ஜி.பாஸ்கரன் கண்டன உரையாற்றி னார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர் குழு சார்பாக சிதம்பர நகர் நிறுத்தத்தில் மாநகர் குழு உறுப்பினர் கே.ஆறு முகம் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மா நகர் செயலாளர் டி.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்து க்குடி 15 வது வார்டில் பூவலிங்கம் தலைமை வகித்தார். தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் 12 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  புறநகர செயலாளர் ராஜா, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் பேச்சி முத்து, மாவட்டக் குழு உறுப்பினர் பூமயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முத்தையாபுரம் பல்க் பஜாரில் புற நகர செயலாளர் ராஜா தலைமை  வகித்தார். தோப்பு பஜாரில் கிளைச் செயலாளர் வன்னியராஜா தலைமை வகித்தார். அய்யன்கோவில் தெரு கிளையில் கிளைச்செயலாளர் கிருஷ்ணபாண்டி தலைமையில் நடைபெற்றது. தங்கமணி நகரில் கிளை செயலாளர் வீரபெருமாள் தலைமை வகித்தார்.

 ராஜீவ் நகரில் புறநகர் குழு  உறுப்பினர் சுப்பையா தலைமை யிலும், நேசமணி நகரில் புறநகர் குழு  உறுப்பினர் ராமசாமி தலைமையி லும், சாமிநகரில் சித்ரா தலைமையி லும், கோவளம் மீனவர் காலனியில் முனியசாமி தலைமையிலும், கக்கன்  நகரில் ஆறுமுகம் தலைமையிலும், திருவைகுண்டம் பகுதியில் ஏரல் காந்தி சிலை முன்பு திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சு.நம்பிராஜன் தலைமையிலும் நடைபெற்றது. சாத்தான்குளம் பகுதியில் ஒன்றியச் செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார்.  எட்டயபுரம் பட்டத்துவிநாயகர் கோவில்திடலில் தாலுகாகுழு உறுப்பினர் செல்வகுமார் தலைமை வகித்தார். மேலவாசல் பகுதியில் கிளை செயலாளர் முருகேசன் தலைமையிலும், அம்மாமடம் கிராமத்தில் கிளை செயலாளர் பாலமுருகன் தலைமையிலும், இளம்புவனத்தில் கிளை செயலாளர் மூக்கையா தலைமையிலும், ரணசூர்நாயக்கன்பட்டியில் கிளை செயலாளர் ராமர் தலைமையிலும், கீழநம்பிரத்தில் கிளை செயலாளர் வெள்ளைசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.