tamilnadu

மகாத்மா காந்தி நினைவு நாள்

மதவெறியன் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவு தினமான வியாழனன்று (ஜன.30) சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசித்து சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், ஆகியவற்றிற்கு எதிராக பெண்கள் உறுதிமொழி ஏற்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாண்டினா, பொதுச்செயலாளர் பி.சுகந்தி, என்எப்ஐடபிள்யூ நிர்வாகிகள் மஞ்சுளா, மனிதி செல்வி, சுயாட்சி இந்தியா பெண்கள் மேரிலில்லிபாய், புரட்சிகர பெண்கள் முன்னணி பரிமளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.