காஞ்சிபுரம், ஜூலை 1- கவிஞரும், எழுத்தாளருமான தோழர் முத்து அருணன் செவ்வாயன்று (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 68. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆயுள் சந்தாதாரராகவும், காஞ்சிபுரம் நகரக்கிளையின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்திலும் செயல்பட்டு வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.