காஞ்சிபுரம்,பிப்.29- காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூர் ஊராட்சிக் குட்பட்டது குருவிமலை. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பித்த அனை வருக்கும் அடையாள அட்டை வழங்காததை கண்டித்தும், சந்தை, குடிநீர், சமுதாயக்கூடம் பிரச்சனை கள் குறித்தும் அதிகாரிக ளிடம் முறையிட்டும் நட வடிக்கை எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குருவிமலை கிளை சார்பில் சனிக்கிழமை யன்று (பிப். 29) ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிபிஎம் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் சிபிஎம் கிளை நிர்வாகிகள் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 100 நாள் அட்டை உடனடியாக வழங்கப்படும், விரைவில் சந்தை ஏலம் விடப்படும், சந்தைக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், உடைந்து உள்ள குடிநீர் குழாய்களை 2 நாட்களில் சரி செய்து கொடுக்கப்படும், 15 நாட்களில் சமுதாயக்கூடம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரி வித்தார். இந்தப் பேச்சுவார்த்தை யின் போது குருவிமலை சிபிஎம் நிர்வாகிகள் சிவப்பிர காசம், பழனி, அரி கிருஷ்ணன்,வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.