செங்கல்பட்டு, மே 3 -ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பொறியியல் படிப்பிற் கான நுழைவுத் தேர்வுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண் ணப்பித்திருந்தனர். 123 நகரங்கள், 5 மத்திய கிழக்கு நகரங்களில் ஏப்.15 முதல் 25ஆம் தேதி வரை நுழைவுத் தேர்வு நடைபெற்றது. நுழைவுத் தேர்வு முடிவுகள் ஏப்.27ஆம் தேதி வெளியிடப்பட்டது.நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் 10 இடங்களை பிடித்தனர். ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து 310 மாணவர்களும், வடகிழக்குப் பகுதியிலிருந்து 150 மாணவர்களும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றனர். ஒவ் வொரு நாளும் நடைபெறும் கலந்தாய்வில் 16 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்புக் கான முதல் நாள் கலந்தாய்வு வெள்ளியன்று (மே 3) துவங்கியது. இந்த கலந் தாய்வை தொடங்கி வைத்து பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் பேசினார். விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பல்வேறு கல்விச் சலுகைகளை டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் வழங்கினார்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆசிய தடகள சாம்பியன் தங்கமங்கை கோமதி மாரிமுத்துவுக்கு பல்கலைக்கழக வேந்தர் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.