காஞ்சிபுரம், ஜூன் 17- சிஐடியு தமிழ்நாடு மாநில மாநாடு செப்டம்பர் மாதம் 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரத்தில் நடைபெறு கிறது. இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்திட 200க்கும் மேற்பட்ட வர்கள் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக் கும் பாதுகாவலனாகச் செயல் பட்டு வரும் இந்தியத் தொழிற் சங்க மையம் (சிஐடியு)வின் தமிழ்நாடு மாநில 14வது மாநாடு வரும் செப்டம்பர் 19 முதல் 22 வரை நான்கு நாட்கள் காஞ்சி புரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு அமைப்புக் குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மதுசூதனன் வரவேற்றார். மாநாட்டை சிறப்பாக நடத்திடுவதற்கான செயல் திட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் முன்மொழிந்து பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வெ. லெனின், வங்கி ஊழியர் சம் மேளனத்தின் நிர்வாகி வி.அரி கிருஷ்ணன், டிஆர்இயு உதவி கோட்டச் செயலாளர் வி.டேனி யல், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஓய். சீதாராமன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் இ.சங்கரதாஸ், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புரு ஷோத்தமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.சௌந்தரி, சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் எ.வாசு தேவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் நகரில் முதன் முறையாக நடைபெறும் சிஐடியு மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட வரவேற்பு குழு தலைவ ராக எஸ்.கண்ணன், செயலாள ராக இ.முத்துக்குமார், பொரு ளாளராக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஓய்.சீதாராமன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வர்கள் அடங்கிய வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் நடத்தப்படும் மாநில மாநாட்டின் நோக்கம் குறித்து சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் பேசுகை யில், “சிஐடியு மாநில மாநாடு முதன் முதலாக காஞ்சிபுரத்தில் நடத்தப்படுகிறது. இம் மாநாட் டில் 750 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்” என்றார். உலகமய தாக்கத்தால் முத லாளிகளிடம் போராடிய காலம் மாறி, முதலாளியிடமிருந்து கோரிக்கைகளை வென்றெடுக்க அரசாங்கத்திடம் போராட வேண் டிய நிலைமைக்கு சென்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.