கள்ளக்குறிச்சி, ஜூன் 8- தனிநபர் விவசாயிகளுக்கு அவர்களின் உற் பத்தி பாதிக்காத வகையில் சூரிய சக்தி யால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியை 50 விழுக்காடு மானியத்தில் அமைத்திட தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2020-21ஆம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல்துறை மூலம் செயல்படு த்தப்பட உள்ளதாக வேளாண்மை செயற் பொறியாளர் தெரிவித்துள் ளார். சூரிய ஒளி மின் வேலி அமைப்பதால் விலங்குகள் மற்றும் அத்துமீறி நுழைப வர்களுக்கு மின்வேலியில் செலுத்தப்படும் உயர் மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியினால் அவற்றிட மிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படும். மேலும் விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும் அதன்மூலம் கிடைக் கும் வருவாய் இழப்பில்லாமல் விவசாயி களுக்கு கிடைத்திட வகை செய்யும் சூரிய ஒளி மின் வேலி அமைப்பதற்காக விவ சாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான செலவுத் தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்மானி யம் வழங்க பரிந்துரைக் கப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம் ஆகிய வட்டங் களைச் சேர்ந்த விவசாயி கள் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்க லம் கூட்டுரோடு பகுதியில் உள்ள வேளா ண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்திற்கு 04151-226370 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருக்கோவிலூர், உளுந் தூர்பேட்டை ஆகிய வட்டங் களைச் சேர்ந்த விவசாயிகள் திருக்கோவிலூரில் என்ஜிஓ நகர் பெரியார் தெருவில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவல கத்திற்கு 04153-253333 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செயற்பொறியாளர் (பொறுப்பு) குமார கணேஷ் தெரிவித்துள்ளார்.