உளுந்தூர்பேட்டை, ஜூலை 14- உளுந்தூர்பேட்டை நகரில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் இங்கு பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகரச் செயலா ளர் கே.தங்கராசு வலியுறுத்தியுள்ளார். உளுந்தூர்பேட்டை நகரில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. நகரின் முக்கிய பகுதி களான கிழக்கு கந்தசாமிபுரம், புதுத்தெரு, பாத்திமா தெரு, அன்னை சத்யா தெரு, பாரிவள்ளல் தெரு, உ. கீரனூர் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. நகரில் மட்டும் 17க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் பேரூ ராட்சி நிர்வாகத்தின் கொரோனா தடுப்புப் பணி போதுமானதாக இல்லை.
கீழ்நிலை ஊழியர்களான துப்புரவு தொழிலா ளர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் அடித்தட்டு பணி யாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரியும் அளவிற்கு அதி காரிகள் செயல்பாடு இல்லை. எனவே தொற்று உள்ள வர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கக் கூடிய சூழலில் பிறருக்கு நோய் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தி யாரும் வெளியே செல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் தெருக்களில் 15 நாட்கள் வரை தொடர்ந்து தினசரி கிருமி நாசினி தெளித்து, கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகளை அப்பகுதி மக்க ளுக்கு வழங்க வேண்டும். உளுந்தூர்பேட்டை நகரில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் உடனடியாக தனி வார்டு அமைக்க வேண்டும் என நகரச் செயலாளர் கே.தங்க ராசு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.