tamilnadu

img

குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 2-  கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் மறைந்த தோழர்  கே.அண்ணாமலை குடும்பத்திற்கு ஒரு  லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. தோழர் கே.அண்ணாமலை கடந்த மார்ச் 21ஆம் தேதி காலமானார். அதற்குமுன்னதாக தனது மகன்  உமாநாத்திற்கும், நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த  தேவராஜ்-கற்பகம் ஆகியோரின் மகள் ராஜலட்சுமிக் கும் திருமணம் நிச்சயம் செய்து வைத்திருந்தார். இதனையடுத்து வியாழனன்று (ஜூன் 2) தோழர் அண்ணாமலையின் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலைமையில், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.எம். ஜெய்சங்கர், பி.சுப்பிரமணியன், எம்.ஆறுமுகம், எம்.செந்தில், ஆர்.சீனுவாசன், டி.எஸ்.மோகன், சிஐடியு  மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சேகர், பொருளாளர் ஆர்.பச்சையப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அந்த மேடையிலேயே தோழர் அண்ணாமலை மனைவி அலமேலுவிடம், கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் குடும்ப பாது காப்பு நிதியை தலைவர்கள் வழங்கினர்.