கள்ளக்குறிச்சி:
மினி டெம்போவும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புறவழிச்சாலையில் அண்ணாநகர் மேம்பா லம் அருகே உத்திரமேரூரில் இருந்து காங்கேயம் நோக்கி மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை மதுரைமாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் தனி யார் ஒப்பந்ததாரரிடம் குறைந்த கூலிக்கு பணிபுரியக்கூடிய வடமாநில இளைஞர்கள் 11 பேர் உட்பட 14 பேர் இருந்தனர். வியாழனன்று (ஜூலை 18) அதிகாலை கோவையில் இருந்து சென்னை நோக்கி 26 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மினி வேனில் பயணம் செய்த 5 பேரும், ஓட்டுநர் மணிகண்டன், ஆம்னி பேருந்து ஓட்டுனர் நெல்லை மாவட்டம் மாயமான் குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (56), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகேந்தர்முங்கியா(35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் 10க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த அசோக் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலர்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.