tamilnadu

கோவில் குடமுழுக்கு  விழாவில் நகைக் கொள்ளை

கள்ளக்குறிச்சி, ஜூன் 14  கள்ளக்குறிச்சியில் கோவில் குடமுழுக்கு விழாவில் நகை கொள்ளை நடைபெற்றுள்ளது.   கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திங்களன்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணு பிரியா (வயது 24) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகை, வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்ந ஆசைத்தம்பி மனைவி சொர்ண புஷ்பம் என்பவர் அணிந்திருந்த 13 சவரன் நகை, வேறு ஒரு பெண்ணிடம் 4 சவரன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  அவற்றின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.