கள்ளக்குறிச்சி. பிப், 27- மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் நீண்டகால குறைகள் தீர்க்கப்பட வில்லை எனக்கூறி அதிகாரிகளிடம் சரமாரியாக புகார் தெரிவித்ததால் கூட் டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தனியார் சர்க்கரை ஆலை தங்களின் கரும்பிற்கு உரிய தொகையை தராமல் தாமதப்ப டுத்துவதாகவும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து இருப்பதாகவும் கூறினர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் தினறினர். கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர், விழுப்புரம் - கள்ளக்குறிச்சி ஒருங்கி ணைந்த மாவட்டம்தான் தமிழகத்தில் அதிகப்படியான விளை பொருட்கள் உற் பத்தியில் முதன்மையான மாவட்டமாக உள்ளது. ஆனால் தமிழக அரசின் சார் பில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், அணைப் பகுதி களிலிருந்து தண்ணீரும் கிடைப்பது இல்லை என்றார். தியாகதுருகம் பகுதி விவசாயி பேசு கையில், தனியார் சர்க்கரை ஆலைக்கு நாங்கள் கரும்பு அனுப்பி பல வருடங்க ளாக பணம் கிடைக்காமல் ஏமாற்றப் பட்டு வருகின்றோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து கால்நடைத்துறை சார் பில் வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கு துறைசார் அதிகாரிகள் லஞ்சம் கேட்ப தாக புகார் எழுப்பப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் விவ சாயிகள் கூறியுள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகளின் மீது உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து கூட்டத்தை நிறைவு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவ லர் சங்கீதா உள்ளிட்டம் அரசு அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.