tamilnadu

img

கடலூரில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

கடலூர், ஜூன் 18- கடலூர் நகரத்தின் மையப்பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் மாபெரும் வணிக வளாகத்தின் (மால்) கட்டுமான  பணி நடைபெற்று வருகிறது.  நகரத்தின் மையப் பகுதியில் மிகப்பெரிய வணிக வளா கம் கட்ட 70 அடி ஆழத்திற்கு ஏரி போல் பள்ளம் தோண்டப்பட்டு  நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில்  நிலத்தடி நீர் உப்பாக மாறி வருவதோடு, கட்டிடங்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியைச் சுற்றிலும் 50 ஆயிரம் பேர் படிக்கக்  கூடிய கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் வணிக  வளாகம் கட்டினால் கடுமையான  போக்குவரத்து நெரிசல் ஏற்ப டும். எனவே, மாவட்ட ஆட்சியர் வணிக வளாகம் கட்டும் இடத்தை ஆய்வு செய்து, பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்  என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் கடிதம்  அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆதி நாராயணன், ராம்குமார், ரமேஷ்,  இளங்கோ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.