கடலூர், ஜூலை 25- கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் 357 ஒப்பந்த தொழி லாளர்கள் பணியாற்றி வந்தனர். சிக்கன நட வடிக்கை என்ற பெயரில் கடந்த மே மாதம் 190 தொழிலாளர்களை பணியிலிருந்து விடு வித்தனர். ஆனால் அவர்களுக்கு கடந்த 10 மாத ஊதியம் வழங்கப்படவில்லை. பணியாளர் எண்ணிக்கைக்கு அனைத்து தொழிற்சங்கங் களும் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது மேலும் 8 பேரை பணியிலிருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் பணி நீக்கம் தொடரும் என்றும் தெரி வித்துள்ளனர். எனவே, நிர்வாகத்தின் பணிநீக்க நடவ டிக்கையை கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி யும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம், தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஸ்ரீதரன், ஒப்பந்த பணி யாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மஞ்சினி மற்றும் பல்வேறு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் கே.விஜய்ஆனந்த், ஏ.எஸ்.குருபிரசாத் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனு மீது கோட்டாட்சியர் விசாரணை நடத்த ஆட்சியர் அறிவுறுத்தியதை தொடர்ந்து கட லூர் கோட்டாட்சியர் ப.ஜெகதீஸ்வரனிடம் மனு அளித்தனர். அதில், கொரோனா காலத்தில் பணி யாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது, ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாதென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பிஎஸ் என்எல் நிர்வாகம் மத்திய அரசின் உத்தர வினை மதிக்காமல் பணிநீக்கத்தில் ஈடு பட்டு வருகிறது, எனவே பணிநீக்கத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.