சிதம்பரம், ஜூன் 13- கிள்ளை பேரூராட்சி பகுதிகளில் உப்பு நீராக மாறும் நிலத்தடி நீரை பாதுகாக்கக் கோரி சிதம்பரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை வரும் 17ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக, சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனிடம் டெல்டா பாசன சங்கத் தலைவர் ரவீந்திரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கற்பனைச் செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி வழியாகச் செல்லும் பக்கிங்காம் கால்வாயில் உப்புநீர் புகாமல் இருப்பதற்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ 3.30 கோடி செலவில் வாய்க்கால்களை அகலப்படுத்தி, ஆழப்ப டுத்தி தற்காலிக தடுப்பணை கட்டப்பட்டது. இது விவசாயத்திற்கு பேருதவியாக இருந்தது. ஆனால் முறையாக பராமரிக்கப்படாத தால் பக்கிங்காம் கால்வாய் வழியாக பழைய னாற்று வடிகால் வாய்க்கால் வழியாக உப்பு நீர் புகுந்து பொன்னந்திட்டு, மானம்பாடி, சிங்கார குப்பம், கிள்ளை, தைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் தனியார் குடிநீர் கேன் நிறு வனங்களால் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீருக்கே மக்கள் அலைய வேண்டியுள்ளது. எனவே பக்கிங்காம் கால்வாயை சீர மைத்து, நிரந்தர தடுப்பணை கட்ட நடவ டிக்கை எடுக்கக் கோரி வருகின்ற 17ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது.