கடலூர், டிச.16- கர்ப்பிணி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாலிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்வதுடன், ரூ.25 லட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட கண்காணிப்பா ளரிடம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம் தலைமையில் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், கடலூர் நகரம், புதுப் பாளையத்தை சேர்ந்த 22 வயது கர்ப்பிணி பெண் தன் கணவர் மற்றும் இருவருடன் திரையரங்குக்கு சென்று இரவு காட்சி பார்த்துக் கெண்டிருந்துள்ள னர். அப்போது, அந்த கர்ப்பிணி கழிப்ப றைக்கு சென்றுள்ளார். அங்கு மறைந்தி ருந்த 4 பேர் கொண்ட சமூக விரோத கும்பல், அப்போது வீடியோ படம் எடுத்து வைத்துள்ளதாகவும், மனைவியை எங்களு டன் அனுப்பி வைக்க வேண்டும். இல்லை யென்றால், அந்த விடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், அந்த கர்ப்பிணியின் கண வரை திரையரங்குக்குள் இருந்து வெளியே அழைத்து வந்து கழிப்பறையில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். படம் முடிந்தவுடன் எங்களுடன் உன் மனைவியை அனுப்பவில்லை என்றால், உன்னை கொலை செய்துவிடுவோம் என்று கடுமை யாக தாக்கியும் உள்ளனர். பிறகு, திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த அந்த கர்ப்பிணி பெண்ணை சுற்றியும் அந்த கும்பல் சூழ்ந்து கொண் டுள்ளது. படம் முடிந்து அந்த கர்ப்பிணி பெண், அவரது கணவர் அவரதுடன் படம் பார்க்க வந்த 4 பேரும் இருசக்கர வாக னத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அந்த சமூகவிரோத கும்பல் ஒரு காரில் அவர்களை பின் தொடர்ந்துள்ளது. இதனால் பயந்துபோன கர்ப்பிணி பெண் மற்றும் அவர்களுடன் வந்த 4 பேரும் அரு காமையில்ருந்த ஒரு வீட்டின் கழிப்பறை யில் பதுங்கியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்தபோது மறைந் திருந்த அந்த கும்பல் அப்பெண்ணின் கணவர் மற்றும் உடனிருந்தவர்களை தாக் கியதோடு, அந்த கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்து கடலூர் லாரன்ஸ் சாலை யிலுள்ள சுமங்கலி சில்க்ஸ் அருகில் அந்த பெண்ணை தரையில் போட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து தப்பிய மற்ற மூவரும் தங்கள் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் மகியிடம் நடந்ததை கூறியுள்ளனர். அவர் உடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். விடியற்காலை 4 மணிக்கு அந்த பெண் கிடைத்தவுடன், அவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அந்த பெண்ணின் தாய், கணவர் மற்றும் சிலருடன் மீண்டும் காவல்நிலையம் சென்று நடந்ததை கூறியுள்ளனர். அப்போது, அனைத்து மகளிர் காவல்நிலையம், புது நகர் காவல்நிலையம் என அலைக் கழித்துள்ளனர். மேலும், பாலியல் துன்பு றுத்தல் மட்டுமே நடந்துள்ளது, பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்று கூற வேண்டும் என்று கூறியதோடு புகாரை பதிவு செய்யவில்லை. பின்னர், அந்த பெண்னிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டு புகார் பதிவு செய்து மூன்றாது நாள்தான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போ தும், பாலியல் துன்புறுத்தல் என்று பொருள் படும் விதத்தில் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு, கார் கைப்பற்றப் பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு 24 மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையும் காவல்துறையினர் மதிக்க வில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண் ணையே மிகவும் மோசமான வார்த்தை களால் திட்டி மிகுந்த மன உளைச்ச லுக்குள்ளாக்கியுள்ளனர். எனவே, கடத்தல், கொலை மிரட்டல், கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தவறிய சம்மந்தப்பட்ட காவல்துறை யினர் மீதும் வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி களுக்கு உயரி தண்டனை உரிய காலத்தில் பெற்றுக்கொடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க ஆவண செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரி வித்திருந்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டிணா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன், பி.கருப்பையன், நகரச் செயலாளர் ஆர். அமர்நாத், நகர் குழு உறுப்புனர் ஆனந்த், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.மேரி, தலைவர் தைனிஸ்மேரி, பொருளா ளர் ஆர்.சிவகாமி, நகர செயலாளர் சாந்த குமாரி, மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.