கடலூர், ஆக. 13- மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் கடலூரில் பணிமனை செயலாளர் எம்.ஆரமுது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரம் நாட்களுக்கு மேல் தொடர் பணி செய்த ஆர்.டி, ஆர்.சி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக ஓடும் கிலோ மீட்டரை நீட்டுவதை கைவிட வேண்டும், டெக்னிக்கல் தொழிலாளியை லோடிங் அன்லோடிங் பணி செய்ய வற்புறுத்தக் கூடாது, தேனாம்பேட்டை சொசைட்டிக்கு தொழிலாளியிடம் பிடித்தம் செய்த ரூ.34 கோடியை அரசு உடனே திருப்பி செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. பணிமனை பொருப்பாளர் பெரியசாமி, பொதுச்செயலாளர் ஜி.மணி வண்ணன், சம்மேளன துணைத்தலைவர் ஜி. பாஸ்கரன், துணை பொதுச்செயலாளர் கண் ணன், செயலாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.