கடலூர், ஜன. 5 - கடலூர் மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் ஆலோ சனைக் கூட்டம் சூரப்ப நாயக்கன்சாவடியில் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஜே.ராமலிங்கம் தலைமையில் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், இந்திய தேசிய காங்கிரஸ் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன், திராவிட கழக மாவட்டச் செயலாளர் சிவக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ராஜாரஹி முல்லா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் சேக்தாவூத், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் முசிப், கிறித்தவ போத கர்கள் சார்பாக பாஸ்டர் மகேந்திரன், பாஸ்டர் சரவணன், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர்கள் கோ.மாதவன், வி.உதய குமார், ஆர்.அமர்நாத், பால்கி, ஜீவானந்தம், பக்கீரான், குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத் தலை வர் விக்டர் ஜெயசீலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வாஞ்சி நாதன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஜனவரி 13 ஆம் தேதி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.