tamilnadu

img

எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 சிதம்பரம், ஆக.20- சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீசுபம்  கேஸ் ஏஜன்சீஸ் சார்பாக எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு  நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு குமாரமங்க லம் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுபம் கேஸ்  நிர்வாக இயக்குநர்கள் புகழேந்தி, சித்தார்த்தன் ஆகியோர்  கலந்துகொண்டனர். இண்டேன் எரிவாயு வாடிக்கையாளர்க ளுக்கு எரிவாயு சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்து வது என்றும், எரிவாயு கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைத்து அதற்கான செயல் விளக்கமும் செய்து காட்டினர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் முத்துகந்தசாமி, மயில்வாகணன், ராஜேந்திரன், ரஞ்சித்குமார், நடராஜன், மோகன், பார்த்திபன், இளங்கோ, அருண்குமார், சுபம்  கேஸ் மேலாளார் ஆனந்த், ராகுல்காந்தி, ராஜா, மணிமாறன்,  புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.