tamilnadu

img

கல்லூரி மாணவி கொலை: உண்மை குற்றவாளியை கைது செய்க!

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீட்டில் உள்ள பெண்கள் பாலியல் வன் கொடுமைகளால் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வுகள் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.கல்லூரி மாணவி கொலையில் ஆகாஷ் என்ற இளைஞரிடம் காவல் துறையினர் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியுள்ளார்கள். இது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. காவல்துறை ஏன் இப்படி செய்தது?இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் தரப் பில் மாணவியும், நானும் காதலித்தது உண்மைதான். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த அனுதாபங் களை தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு தரப்பில் நிவாரண உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும்.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதிலிருந்து