கடலூர், ஜன. 27- கடலூரிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 75 வயதான முதியவர் திங்களன்று (ஜன.27) தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன் உள் ளிட்டோர் மனு வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, 75 வயது முதியவர் மனு அளித்து விட்டு திடீரென தனது கையிலிருந்த பாட்டிலி லிருந்து மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டார். அரசுத்துறை அலுவலர்கள் முன்னிலை யில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த முதியவரை மீட்டு முதலுதவி அளித்த னர். பின்னர் அவர் விசாரணைக்காக கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல்துறை விசாரணையில், சிதம்பரம் வட்டம் கீழ்அனுவம் பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்றும் இவருக்கு 4 மகன் கள் உள்ள நிலையில் கடைசி மகன் மட்டுமே பெற்றோரை கவனித்து வந்துள்ளார். வெளி நாட்டிற்குச் சென்று அனுப்பி வைத்த பணத்தில் கோவிந்தராஜ் வீடுகட்டியுள்ளார். அந்த வீட்டை கடைசி மகன் பெயரில் எழுதி வைத்ததற்கு மற்ற 2 மகன்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அந்த வீட்டில் வசித்து வந்த கடைசி மகனின் குடும்பத்தினரையும் வெளி யேற்றி விட்டு வீட்டை அபகரித்துக் கொண் டுள்ளனர். மேலும், கோவிந்தராஜையும் வீட்டை விட்டு வெளியேற்றியதால் அவர் கிள்ளை ரயில் நிலையம் அருகே வசித்து வரு கிறார். இதுகுறித்து கிள்ளை காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை யாம். எனவே, இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிப்பதற்காக வந்தபோது இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.