tamilnadu

img

ஜிடிபி 5.1 சதவீதத்தை தாண்டாது... ‘கிரிசில்’ நிறுவனம் கணிப்பு

புதுதில்லி:
2019-20 நிதியாண் டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவிகிதமாக மட்டுமே இருக்கும்என்று ‘கிரிசில்’ நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.2019-20 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்தது. அதற்கடுத்த ஜூலை - செப்டம்பர்இடையிலான இரண்டாவது காலாண்டிலும், ஜிடிபி மேலும்குறைந்து 4.5 சதவிகிதத்திற்கு சரிந்தது.இந்நிலையில் 2019-20 நிதியாண்டின் முடிவில், அதாவது, 2020 மார்ச் மாதத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று ஆய்வுநிறுவனமான ‘கிரிசில்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.இதற்கு முன்னர், 2019-20 நிதியாண்டின் முடிவில் 6.3 சதவிகித வளர்ச்சியை இந்தியா பெறும் என்று கிரிசில்அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது அதில், 1.2 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளது.