ஸ்ரீநகர்:
காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ற பெயரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த 12 நாட்களாகஇந்நிலை நீடித்து வருகிறது. மக்கள் தந்திரமாக நடமாட முடியவில்லை. பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. கடைகள் மூடப்பட்டுள்ளன. தொலை பேசி வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபாமுப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமிஉள்ளிட்ட அரசியல் கட்சித் தலை வர்கள் பலரும் வீட்டுச்சிறை வைக்கப் பட்டுள்ளனர்.மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரதுமகள் இல்திஜா முப்தி உள்ளிட்ட குடும்பத்தினர் குப்கர் சாலையிலுள்ள இல்லத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளார். இதனிடையே, இல்திஜாவைச் சந்திக்க, ‘தி வயர்’ இணையதள ஊடகத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், கடந்த 7-ஆம் தேதி குப்கர் சாலை இல்லத்திற்கு சென்றார். ஆனால், பாதுகாப்பு படையினர் அவரைத் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா எழுதிய கடிதம் ஒன்றை ‘தி வயர்’ இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில் இல்திஜா கூறியிருப்பதாவது:“அன்புள்ள ஐயா, நான் எனது கைதுகுறித்து அறிய மேற்கொண்ட முயற்சி கள் தோல்வி அடைந்ததால், இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் எனது அடிப்படை உரிமைகள் குறித்து கேள்விஎழுப்புவதற்காக, குற்றம் சாட்டப்பட மாட்டேன்; தண்டிக்கப்பட மாட்டேன் என நம்புகிறேன்.
காஷ்மீரில் கடந்த 10 நாட்களாக ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பயத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். காஷ்மீரில் இருண்ட மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதுகுறித்துப் பேசும் அனைவரின் பாதுகாப்பை எண்ணி நான் அஞ்சுகிறேன். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது முதல் நாங்கள் விரக்தி யில் காலம் தள்ளுகிறோம்.நாட்டின் அனைத்து பகுதியினரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், காஷ்மீர் மக்கள் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு விலங்குகள் போல அடைக்கப்பட்டுள்ளனர். நானும் எனது வீட்டுக்குள் காவலில் வைக்கப் பட்டுள்ளேன். எங்களைச் சந்திக்க வருபவர்கள் பற்றிய தகவல்கள் எங்களுக்கு அளிக்கப்படுவது இல்லை. அவர்களைச்சந்திக்க எங்களையும் அனுமதிப்பது இல்லை.நான் எந்தவொரு கட்சியையும் சேராதவள். சட்டத்தை எப்போதும் மதிக்கும் குடிமகள். நான் ஒரு சில ஊடகங்களில் அளித்துள்ள பேட்டி காரண மாக என்னைக் கைது செய்துள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர். சட்டப்பிரிவு 370 குறித்து எனது கருத்துக்களை கூறியதற்காக நான் கைது செய்யப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.ஆனால், எனது காஷ்மீர் மக்களுடைய எண்ணத்தையும், துயரத்தையும் வெளியில் சொல்வது எப்படி தவறாகும்? என்று எனக்குப் புரியவில்லை. எங்களின் துயரத்தை வெளியில் சொல்வது எவ்விதத்தில் குற்றமாகும்? அதற்காக எங்களைக் கைது செய்ய முடியுமா?
உலகில் எந்த குடியரசு நாட்டிலா வது, ஒருவர் தனது பேச்சுரிமையைப் பயன்படுத்துவது குற்றம் என சொல்லப்பட்டுள்ளதா? ‘சத்யமேவ ஜெயதே’- அதாவது, ‘வாய்மையே வெல்லும்’ என்பது நமது நாட்டின் முழக்கமாகும். ஆனால், நமது நாட்டில் வாய்மையைப் பேசுவோர் போர்க்குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர். தயவுசெய்து, நான் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளேன் என்பதையும் எனக்கு எத்தனை நாட்கள் வீட்டுக்காவல் தண்டனை என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில்அஞ்சல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள தால், இந்த கடிதத்தை அஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பாததற்கு மன்னிப்பு கோருகிறேன். ‘உண்மை என்றும் வெல்லும்’. வாழ்த்துக்கள்!
இவ்வாறு இல்திஜா கூறியுள்ளார்.கடிதம் மட்டுமன்றி, ‘வாய்ஸ் மெசேஜ்’ ஒன்றையும் இல்திஜா முப்தி பதிவிட்டுள்ளார். அதில் “மத்திய அரசின் நடவடிக்கைகளால் காஷ்மீருடன் மற்ற பகுதிகளுக்கான தொடர்பு முற்றிலும்முடங்கிபோயுள்ளது. நான் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்படு கிறேன். தொடர்ந்து நான் கண்காணிக் கப்படுகிறேன். மற்ற காஷ்மீரிகளை போலவே, எனது வாழ்க்கையை எண்ணி நான் பயப்படுகிறேன்” எனத் தெரி வித்துள்ளார்.