tamilnadu

img

மெகபூபாவின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு....

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான, மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து, ஜம்மு - காஷ்மீர் பிரதேசஉள்துறை உத்தரவு பிறப்பித் துள்ளது.கடந்த, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரின் மாநில அந்தஸ்தைப் பறித்த மத்திய பாஜக அரசு, இதற்கு எதிராகபோராட்டங்கள் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தது. 

பொதுப் பாதுகாப்பு சட்டத்தையும் அவர்கள் மீது பாய்ச்சியது.இதற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் வர்கள், பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா ஆகியோரை மட்டும்அண்மையில் விடுதலை செய் தது. மற்றொரு முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தியும் அப்போதே விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இந்நிலையில், ‘பேர்வியூ’ அரசு பங்களாவில் 8 மாதங்களாகவீட்டுச் சிறை வைக்கப்பட்டிருக்கும், மெகபூபா முப்தியின், காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு - காஷ்மீர்பிரதேச உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.