பெங்களூரு:
சூரியன் குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா-எல் 1 எனும் புதிய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவு குறித்து ஆய்வுக்கு சந்திரயான்-3 செயற்கைக்கோளும் அடுத்த ஆண்டு செலுத்தப்பட இருப்பதாகவும், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யானுக்காக முதல் ஆளில்லா சோதனை ராக்கெட் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஆதித்யா-எல்1-ஐ விண்ணுக்கு எடுத்துச் செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் 6 விஞ்ஞான ஆராய்ச்சி செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ளது.