ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது பதவியில் இருந்து விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தனக்கு சாதகமான செய்திகளை வெளியிட மீடியாக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாகவும், தன் நண்பர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருட்களை பரிசாகப் பெற்றதாகவும் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கடந்த 10 மாதங்களாக வந்து கொண்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெஞ்சமின் நேதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலிய பிரதமர் பதவியில் இருந்து விலக மறுப்பு தெரிவித்துள்ளார்.