tamilnadu

img

நுண் கடன்:  எஸ்பிஐ வழங்குகிறது

சென்னை:
நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண் கடனுக்கு ஒரு தனிப் பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.குறிப்பாக, கிராமப்புற மற்றும்  சிறிய நகர்ப்புறங்களில்  அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண் கடன் சந்தைகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. புதிதாக தொடங்கப்பட்ட இந்தப் பிரிவின் கீழ், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் மற்றும் நுண்,சிறு நிறுவனங்களுக்கு முக்கியமாக கடன்களை வழங்கும். சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகளுக்கு நுண் கடன் உள்ளிட்ட  நுண் கடன் பிரிவுக்கு சிறப்பு சேவைகளை வழங்குவதற்காக கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் சுமார் 8,000 கிளைகள்  அடையாளம்  காணப்பட்டுள் ளன. கிராமப்புற,  சிறிய நகர்ப்புற, நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் 63,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவை நிலையங்களில்  வங்கியின் பரந்த நெட்வொர்க் மூலம் இந்த  சேவைகள்  கிடைக்கும் என்று எஸ்பிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.