tamilnadu

img

மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.1.50 உயர்வு: அரசு உத்தரவு

சென்னை:
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்த உத்தரவை உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜன் சிங் சவாண் வெளியிட்டார். அதில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால், நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மண்ணெண் ணெய் லிட்டருக்கு ரூ.15-லிருந்து ரூ.16.50-ஆக உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு போன்றவை இலவசமாக வழங்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.