tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூலை 1

1859 - போலந்து-லிதுவேனிய காமன்வெல்த்தை உருவாக்கிய, லப்ளின் ஒன்றியம் உருவானது. உண்மையில், 1386இலிருந்தே, இரு நாடுகளும் அரசர் ஒன்றியமாகத்தான் இருந்தன. இரண்டு நாடுகளுக்கு ஒரே அரசர் இருப்பது, திருமண உறவுகள் முதலானவற்றால் ஐரோப்பாவில் இயல்பானதாக இருந்தது. பிற காரணங்களுக்காகவும் ஒரே அரசரால் ஆளப்படும் பகுதிகள் அரசர் ஒன்றியம்(பர்சனல் யூனியன்) என்றழைக்கப்பட்டன. இத்தகைய ஒன்றியத்தில், இரு நாடுகளின் அரசமைப்பு, நிர்வாகம் உள்ளிட்டவை தனித்தனியாகவும், பெரும்பாலான நேரங்களில் மாறுபட்டவையாகவுமே இருக்க, அரசர் மட்டும்தான் பொதுவானவராக இருப்பதால், சில நிர்வாக ஒத்துழைப்புகளைத் தவிர்த்து இவை தனித்தனி நாடுகள்தான். லிதுவேனியாவின் கிராண்ட் ட்யூக் ஜோகலியா, போல்ந்தின் அரசியான ஹெட்விக் ஆகியோரிடையேயான திருமணம் இந்நாடுகளை ஒருங்கிணைத்திருந்த நிலையில், லப்ளின் ஒன்றிய ஒப்பந்தம், இதனை உண்மையான ஒன்றியமாக்கியது. நிர்வாக அமைப்பில் ஒருங்கிணைப்புடன் ஒன்றாகச் செயல்படுவது ரியல் யூனியன் என்றழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்மூலம், பரப்பிலும், மக்கள்தொகையிலும் இது ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாகியது.

கூட்டமைப்பு, அரசமைப்புச்சட்ட முடியரசு, மக்களாட்சி ஆகிய தற்காலத்திய அமைப்புகளுக்கு இதுவே முன்னோடியாகியது. இதன் மக்களுக்கு சமயச் சுதந்திரத்தை வழங்க 1573இல் உருவாக்கப்பட்ட வார்சா கூட்டிணைவு, ஐரோப்பிய நாடுகளில் சமயச் சுதந்திரத்துக்கான தொடக்க நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பாவிலேயே அதிக தானிய உற்பத்தியாகும் இடமென்பதால்,  உபரி தானியங்களின் வணிகத்துக்கு உதவுவதே இந்த ஒன்றியம் உருவாவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. பண்ணையடிமை முறையை அடிப்படையாகக் கொண்டிருந்த இப்பகுதிகளில், வணிகம் வளர்ச்சியடைந்ததும், அடிமை முறை தடைசெய்யப்பட்டது. வணிகத்தால் செழித்திருந்தவர்களின் முயற்சியாலேயே ஒன்றியம் உருவானதுடன், அவர்களால் அரசரின் உரிமைகளையும் கட்டுப்படுத்த முடிந்ததாலேயே இது அரசமைப்புச் சட்ட முடியாட்சியானது.

இந்த ஒன்றியத்தில் 1971இல் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டமே, ஐரோப்பாவின் முதல் தொகுக்கப்பட்ட நவீன அரசமைப்புச் சட்டம் என்பதுடன், உலகிலேயே (அமெரிக்காவுக்கு அடுத்து) இரண்டாவதும் ஆகும். வணிகத்தின் வளர்ச்சிக்கேற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தாதது, தொழிற்துறை வளர்ச்சியில் அக்கறை காட்டாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த அரசு வலுவிழந்தது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மூன்று பிரிவினைகளில் போலந்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக்கொள்ள, போலந்து என்ற நாடே இல்லாமற் போனதுடன், 1795இல் இந்த ஒன்றியம் முடிவுக்கு வந்தது.\

===அறிவுக்கடல்===