புதுதில்லி:
வேளாண்துறையை லாபகரமாக மாற்றுவதும், வேளாண்துறையில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதும்தான், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைவரான நாராயண மூர்த்திகூறியுள்ளார்.
உலகின் மற்றநாடுகளை விட, இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. அதிலும் தனிநபர் வருமானம் மிகவும் மோசமான வகையில்உள்ளது. உழைப்புக்கேற்ற ஊதியமும்வழங்கப்படுவது இல்லை. வேளாண்துறையும் கடுமையான வேலையிழப்பைச் சந்தித்து வருகிறது.இந்தியாவின் மிகப்பெரிய, தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களில் ஒன்றான, ‘இன்போசிஸ்’-ன்நிறுவனரும் அதன் தலைவருமான நாராயணமூர்த்தி, மும்பை ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் தனிநபர் வருவாய் சராசரியாக 2 ஆயிரம் டாலர் என்ற அளவில்இருக்கிறது; அதிலும் வேளாண்துறையில் தனிநபர் வருவாய் வெறும் 500 டாலராகஇருக்கிறது; இதனால்தான் பலர் வேளாண்துறையை விட்டு, மற்ற துறைக்குச் செல்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் சுமார் 58 சதவிகிதத்தினர் வேளாண் துறையை மட்டுமே நம்பியிருக்கின்றனர்; ஆனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு வெறும் 14 சதவிகிதமாகவே இருக்கிறது.விவசாயிகளுக்கான தனிநபர் வருவாயில் நாள் ஒன்றுக்கு 1.5 டாலர் அல் லது 100 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு விவசாயக்குடும்பங்களால் உணவு, சுகாதாரம், கல்வி, வாடகை உள்ளிட்ட தேவைகளைஎவ்வாறு பூர்த்தி செய்ய முடியும்? அதனால்தான், இந்தியாவில் வறுமை என் பது மிகப் பெரிய அளவில் இருக்கிறது. எனவே, வேளாண் துறையில் தனிநபர் வருவாயை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியாவில்வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு நாராயணமூர்த்தி பேசியுள்ளார்.