பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் கவுட்டா நகரில் உள்ள சந்தை பகுதியில் இன்று காலை 7.35 மணியளவில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்க வில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.