காத்மாண்டு
இமயமலை பகுதியில் உள்ள நமது அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறைவு தான் என்றாலும் தொடக்க நடவடிக்கையாக அந்நாட்டு அரசு மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், வரும் 27-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கில் உள்நாட்டு,வெளிநாட்டு விமானப்போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும், அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும் எனவும் நேபாள அரசு அறிவித்துள்ளது.