tamilnadu

img

ரஷ்யாவை மிரட்டும் கொரோனா.... இன்று ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு 

மாஸ்கோ 
வட துருவ பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் அப்பகுதி இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பா கண்டத்தில் கொரோனா தற்போதைய மையமாக உள்ள ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 10,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ரஷ்யாவில் ஏற்படும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுதான். நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் 58 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 1,250 ஆக அதிகரித்துள்ளது. 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அங்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குள் தான் உள்ளது. இதற்குக் காரணம் அந்நாட்டின் சிறந்த மருத்துவச் சிகிச்சை என்று கூட கூறலாம்.