tamilnadu

img

நவம்பர் 14 வரை காத்திருப்போம்..

ஸ்ரீநகர்:

“மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் எதுவும் இல்லாமல், மாநில அந்தஸ்தை மத்திய அரசே பறிக்கும் முதலாவது மாநிலம் ஜம்மு-காஷ்மீர்தான். அதிக மக்கள்தொகை இல்லாத லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகஇருக்கும். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைஉள்ள யூனியன் பிரதேசமாக, புதுவையைப் போல இருக்கும். இந்த மாற்றத்தின் அம்சங்கள் அந்த மக்களுக்கு இன்னும்முழுமையாகப் புரிய வைக்கப்படவில்லை’’ என்று ஸ்ரீநகர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், அரசியல்சட்ட நிபுணருமான ரியாஸ் காவர் கூறுகிறார்.

முந்தைய சட்டத்தில் மதகுருவுக்கு உரிமையில்லை
மாநிலத்தில் அமலில் இருந்த 420 சட்டங்களில், 136 சட்டங்கள் மட்டுமே புதியஏற்பாட்டின் கீழ் அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ``எல்லா இடங்களிலும் ஒரே சட்டம் தான். இங்கே நல்ல சட்டங்கள் இருந்தன. உதாரணமாக வக்பு
சட்டம். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் வருவாயை மத குருமாருக்கு அளிப்பதை அனுமதிக்காது. ஆனால் மத்திய வக்ஃபு சட்டம் வேறுபட்டது. அதில், மதகுருவுக்கு உரிமை உண்டு என்று அதில்உள்ளது’’ என்கிறார் காவர்.மாற்றத்தின் விவரங்கள் குழப்பமானவையாக இருப்பதால் மக்கள் கருத்தை அறிய முடியவில்லை என்று கல்லூரி மாணவரும், வளரும் எழுத்தாளருமான குராத் ரெஹ்பர் கூறுகிறார்.`”அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முந்தைய நிலைமை இனிமேலும் எங்களுக்கு இருக்காது என்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். மேற்கொண்டு எந்த விவரங்களும் எனக்குத் தெரியாது. ஆனால், மக்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதையும், எங்களுக்கு இருந்த சட்டப்பூர்வ மற்றும் அரசியல்அதிகாரங்கள் இனிமேல் கிடைக்காதுஎன்பதையும் புரிந்து கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் குராத்.

நிர்வாக நடைமுறைகள் சீர்குலைக்கப்படும்
புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கும் செயல்பாடு அதிக நடைமுறைகளைக்கொண்டதாக இருக்கும் என்று இங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில மனிதஉரிமைகள் கமிஷன் உள்பட, குறைந்தது ஒரு டஜன் கமிஷன்கள் கலைக்கப்பட்டு, அவற்றின் அலுவலர்கள் வேறு துறைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாநில தேவைகளுக்காக கடந்த பலபத்தாண்டுகளில் மாநில அரசு உருவாக்கிய 100க்கும் மேற்பட்ட சட்டங்கள் இப்போது காலாவதியாகிவிட்டன. மத்தியசட்டங்களை அமல் செய்ய சில துறைகள் உருவாக்கப்படும். சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 89ல் இருந்து 114 ஆக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் கருத்து கூறஅஞ்சுகின்றனர். அப்படி பேச முன்வருபவர்களும், தங்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.``மாநில அதிகாரிகளும், அலுவலர்களும் தில்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படும் நிர்வாகச் சக்கரத்தின் பற்களைப்போல தான் இருப் பார்கள். சம்பளக் குறைப்பு அல்லது கட்டாய இடமாற்றம் எதுவும் இல்லை. ஆனால் நாங்களும், எங்களுக்கு முன்புபணியாற்றியவர்களும் உருவாக்கிய நிர்வாக நடைமுறைகள் சீர்குலைக்கப் படும் என்ற உணர்வு உள்ளது’’ என்று காஷ்மீரி அதிகாரி ஒருவர் கூறினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த இந்திய சட்டங்களும், முஸ்லிம்பெண்கள் விவாகரத்து தொடர்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமும், இப்போது தானாகவே ஜம்மு காஷ்மீரிலும் அமலுக்கு வந்துவிடும்.

மக்கள் அச்சம்
சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.5000 கோடி மதிப்புக்கான முதலீட்டுத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாநில மக்களின் கலாசாரம் அல்லது அடையாளத்தை இந்த முடிவு எந்த வகையிலும் பாதிக்காது என்று அரசு திரும்பத் திரும்ப உத்தரவாதம் அளித்து வருகிறது.``வெளி மாநிலத்தவர்கள்’’ காஷ்மீருக்கு வந்து ஆதாரவளங்களை சுரண்டத் தொடங்கி விடுவார்கள் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

மிகப் பெரிய மோசடி
கடந்த ஆண்டு பரூக் அப்துல்லாவின்தேசிய மாநாட்டுக் கட்சியில் சேர்ந்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னெயின் மசூதி இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ``மிகப் பெரிய அரசியல் சாசன மோசடி’’ என்று அவர் கூறுகிறார்.இந்தப் பிரச்சனை உச்சநீதிமன்றத் தில் உள்ளது. 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முஸ்லிம்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நவம்பர்14 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறது.ஆனால் அரசு அதற்குள் அவசரம் காட்டுவதாகத் தெரிகிறது. இது மறுஆய்வுக்கு உகந்தது என்று உச்சநீதிமன்றம்கருதி, இதை விசாரிக்க நீதிபதிகள் அமர்வை நியமிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், உள்ளூர் நிர்வாகக் கட்டமைப்புகளை அரசு எப்படி கலைத்துவிட்டு துணைநிலை ஆளுநர்களை நியமிக்கும்?’’அடிப்படை மாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணம் பற்றி மசூதி கேள்வி எழுப்புகிறார்.``வளர்ச்சி தடைபட்டது என்று சொல்கிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், வளர்ச்சிக் குறியீட்டில் ஜம்மு - காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. இங்கே பிச்சைக்காரர்கள் கிடையாது. நடைபாதைகளில் தூங்கும் மக்கள் கிடையாது. வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை உள்ளது. ஆனால், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் பாராமுகம் தான் காரணம்’’ என்று மசூதி கூறுகிறார்.இந்தியாவின் தேசிய நீரோட்டத்திற்குகாஷ்மீரிகளைக் கொண்டு வருவது தான்இந்த நடவடிக்கையின் நோக்கம் என்பதுஉண்மையாக இருந்தால், ``அது இடைவெளியை அதிகரித்துவிட்டதாக அஞ்சுகிறேன்’’ என்று அவர் குறிப்பிட்டார்.யூனியன் பிரதேசமாக மாறுவது பற்றிக் கேட்டதற்கு, ``எல்லாமே இன்னும்முடிந்துவிடவில்லை. நவம்பர் 14 ஆம் தேதிநீதிமன்ற விசாரணை வரை நாம் காத்திருப்போம்’’ என்று பதில் அளித்தார்.