ஹைதராபாத்:
சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கற்களை கையில் எடுத்தால், நாங்கள் வெடிகுண்டுகளை கையில் எடுப்போம் என்று தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. மிரட்டல் விடுத்துள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, தெலுங்கானா மாநிலம் வாரங் கல்லில் பாஜக-வினர் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் கலந்து கரீம் நகர்எம்.பி. பண்டி சஞ்சய் குமார் பேசியுள்ளார். அப்போதுதான் இவ்வாறு அவர்மிரட்டியுள்ளார்.“எங்களைப் போன்ற சில தேசபக்தர்கள்(!) குண்டூர் அருகே உள்ள தெனாலியில் பேரணி சென்றபோது தேசதுரோகிகள் சிலர் கற்களால் தாக்கினார்கள். நாங்கள் பயந்துவிட்டோமா? நீங்கள் கற்களை எடுத்தால், நாங்கள் வெடிகுண்டுகளை எடுப்போம். நீங்கள் கம்புகளை எடுத்தால், நாங்கள் கத்திகளை எடுப்போம். நீங்கள் ராக்கெட்டுகளால் தாக்கினால், நாங்கள் ஏவுகணைகளால் தாக்குவோம்” என்று சஞ்சய் குமார் கூறியுள்ளார்.அத்துடன், “போர் தொடங்கிவிட்டது” என்று சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.