ஸ்ரீநகர்:
மத்திய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநிலம் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல், காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை 82-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டன. ஆனால் காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. காஷ்மீரில் உள்ள பெரிய மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.