ஹைதராபாத்:
சொத்துக் குவிப்பு வழக்கில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளியன்று ஆஜரானார்.ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 2011 ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2012 ஆம் ஆண்டு மே மாதம் கைதுசெய்தது. 16 மாதங்களுக்கு பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஜனவரி 10 அன்று இவ்வழக்கில் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று ஐதராபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வெள்ளியன்று ஜெகன்மோகன் ரெட்டி ஆஜரானார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.