சென்னை, மே 14- புதியதாக உருவாகிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி யபின் புயலாக மாறும் என்றும் இதனால் வங்கக் கடலில் பலமாக காற்று வீசும். ஆகவே, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.