டிச.27,30-இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
சென்னை, டிச.7- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி சனிக்கிழமையன்று அறிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் மீண் டும் பழைய தேதியைத்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங் களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில் வார்டு மறுவரை யறை பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உள்ளாட்சித்தேர்தல் அறி விப்பாணைக்கு தடை கோரியும் உச்சநீதி மன்றத்தில் திமுக மற்றும் 5 புதிய மாவட் டங்களின் வாக்காளர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் வெள்ளியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒன்பது மாவட்டங்கள் தவிர தமிழ கத்தின் மற்ற மாவட்டங்களில் உள் ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்திற்கு அனுமதியளித்தது. வார்டு வரையறைப்பணிகள் முடி வடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென் காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தடை விதிப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறி விப்பாணைக்குத் தடை விதிப்பதாக வும், எனவே, புதிய அரசாணை வெளி யிட்டு தேர்தலை நடத்துமாறு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை யை மாநில தேர்தல் ஆணையம் திரும் பப் பெற்றது. இந்நிலையில் சனிக்கிழ மையன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்க ளில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 27 அன்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 30 அன்றும் வாக்கு எண் ணிக்கை ஜனவரி 2 அன்றும் நடைபெறு கிறது. வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9 முதல் நடைபெறும். டிசம்பர் 16 இல் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். டிசம்பர் 17 அன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற டிசம்பர் 19 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மாவட்ட, ஒன்றியக்குழு தலை வர்கள், ஒன்றியக்குழு துணைத் தலை வர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலை வர்களுக்கான மறைமுக தேர்தல் ஜன வரி 11 அன்று நடைபெறுகிறது.