tamilnadu

img

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கற்பனை அல்ல: எஸ்.ராமகிருஷ்ணன்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை  ஒரு லட்சம் பிரதியை விற்பனை  செய்த நிகழ்வு வரலாற்றில் மறக்கமுடி யாத நாள், தமிழகம் முழுவதும் இந்த  அறிக்கையை மக்களிடையே கொண்டு சேர்த்த மகத்தான பணி யைச் செய்திருப்பது நல்ல அம்சம்.  இன்றைய காலகட்டத்தில் அறிக்கை யின் தேவை என்ன என்பதை மக்கள்  மத்தியில் கொண்டு செல்லவேண்டிய  கட்டாயம் உள்ளது. இது கம்யூனிஸ்ட்டு களுக்கு மட்டுமானதல்ல இது ஒரு வர லாற்று ஆவணம். மாணவர்கள் அவசி யம் படிக்கவேண்டிய தொகுப்பு.  சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வர்கள் படிக்கவேண்டிய நூல், இந் நூலின் வாசிப்பை கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்தார்கள். அதுமட்டுமன்றி அதில் கூறப்பட்ட கருத்துக்களை தங்  கள் வாழ்க்கையில் செய்து காட்டி னார்கள். 1848ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. அறிவின் சிகர மாக இருந்த இளைஞர் காரல்மார்க்ஸ்  எழுதியவர். இதன் முதல் வரை யறையை எழுதியவர் ஏங்கல்ஸ். இறுதி வரையறையை மார்க்ஸ் எழுதி நிறைவு செய்தார்.

மார்க்சுக்கு முந்திய தத்துவவாதி களுக்கும் அவருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. உலகம் முதன்  மையானது, அதில் மனிதன் ஒரு  அங்கம் என்பதைத் தனது அறிக்கை யில் எழுதினார். குறிப்பாக பொருளா தாரம், வரலாறு, பண்பாடு மனிதனின்  வாழ்க்கையைத் தீர்மானித்ததைக் கண்டறிந்தார். வளர்ந்துவரும் முத லாளித்துவம் நிலப்பிரபுத்து வத்தை அழித்து உருவாகிக்கொண்டி ருக்கிறது. மனிதனின் புறச்சூழலை அவதானித்து தனது படைப்பை எழுதினார். கம்யூனிஸ்ட் அறிக்கை 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. நீண்ட அறிக்கையாகவும் மார்க்ஸ் பேச்  சைப்போல் இருந்தது. கம்யூனிஸ்ட் களைக் களங்கப்படுத்த எதிரிகள் பயன்படுத்திய வார்த்தையாக “கம்யூ னிஸ்ட் பூதம்’ என்பதையே தனது  அறிக்கையில் துவக்க வார்த்தை யாகப் பயன்படுத்தினார் மார்க்ஸ். ஐரோப்பாவில் உருவான இந்த  பூதத்திற்கு எதிராக அரசர்களும், போப்பாண்டவரும் ஒன்றிணைந்து புனிதக் கூட்டணி என்ற பெயரில் ஒரு  கூட்டணியை உருவாக்கினர். அந்த  எதிரிகள் எழுப்பிய கேள்விகளை மார்க்ஸ் எழுப்பி அதற்குப் பதிலும்  அளிக்கிறார். உலகின் மனிதக்குலத்  தின் வரலாறு என்பது  வர்க்கப்போராட் டத்தின் வரலாறுதான் என்றார். ஞானத்தின் அறிவொளியாக மார்க்ஸ்  விளங்கினார்.

முதலாளித்துவம் தனது சுய லாபத்திற்காக எதையும் செய்யும், தனி நபர்களின் அதிகாரத்தைத் தானே  அழிக்கிறது. கிராம மக்களை நகரங்  களை நோக்கிப் பயணிக்க வைத்தது.  கிராமப் பொருளாதாரம் வீழ்ச்சியாக வும் நகரம் வளர்ச்சியாகவும் உள்ளது  என்ற படிநிலையை உருவாக்கியது. சேரியை உருவாக்கி மனிதர் மத்தி யில் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது. முதலாளித்துவம் தன் அழிவிற்கான  காரணத்தைத் தானே உருவாக்கிக்  கொண்டிருக்கிறது என்று காரல்மார்க் சின் கணிப்பு உண்மையாக மாறி வருகிறது. இந்த அறிக்கையை அறிவுசார் மக்கள் வாசிக்கத்தொடங்கி விட்டனர்.  எதிர்காலம் குறித்து மார்க்சின்  தெளிந்த சிந்தனை பிரமிக்கச்செய்கி றது. எளிய வார்த்தைகளைப் பயன்ப டுத்தி கவிதைபோல் எழுதியிருக்கி றார். இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்ட மார்க்ஸ் ஒரு வாக்கியத்திற் கும் இன்னொரு வாக்கியத்திற்கும் இடையே எளிமையான சொற்களைப்  பயன்படுத்தியுள்ளார்.  அறிக்கை யின்  கடைசி வரியில் இந்த மக்களிடம்  இழப்பதற்கு அடிமை சங்கிலியைத்த விர எதுவுமே இல்லை; ஆனால் பெறு வதற்கோ ஒரு பொன்னுலகம் காத்துக்  கொண்டிருக்கிறது என்று நிறைவு செய்கிறார்.

ஒரு மானுட வரலாற்றையே தொகுத்து எழுதிய மார்க்ஸ் அறி விற்சிறந்தவர்.  இந்தியாவிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதன்முதலில் வங்கத்தில் தான் மொழி யாக்கம் செய்யப்பட்டது. முதலாளித்து வம் குடும்பம் என்ற அமைப்பைச் சிதைத்து விடும் என்று மார்க்ஸ் அன்றே கணித்து எழுதினார். ஆண், பெண் சமம் என்ற கோட்பாடும் சிறார்  உள்ளிட்ட எல்லொருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதும் அறிக்கை யில் எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்தைக் கொண்டாடிய மார்க்ஸ் மதம் குறித்து தனது கருத் தைத் தெளிவாகக் கூறியுள்ளார். மத நிறுவனங்கள் செய்யும் சேவைகள் என்பது பன்னீர் தெளிப்பது போன்றது. பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவிக்காமல் அதிலேயே கட்டுண்டு  கிடக்கச்செய்கிறது. பன்னாட்டுச் சந்தையை உருவாக்கி அனைத்தை யும் வர்த்தகமாக்குகிறது. அறிவு  என்பது விற்பனை சரக்காக மாற்றப்  பட்டுவருகிறது. இதனை கம்யூ னிஸ்ட்டுகள் எப்படிக் கையாள வேண்டும் என அறிக்கையில் மார்க்ஸ் முன்னுணர்ந்து தீப்பொறியைப் போல் தனது பதிவைச் செய்கிறார். மனிதனின் ரத்தத்தில் உள்ள கிருமி களைக் கண்டறியும் நுண்ணோக்கி போன்றது இந்த அறிக்கை. இது சமூக அவலங்களைக் களைவதற்கான வேலையைச் செய்யக்கூடியது. அறி வியல் பூர்வமாக எழுதப்பட்ட இதில் எந்த கற்பனையும் இல்லை. இது அறிக்கை அல்ல நிஜம்.

முதலாளித்துவம் தோற்றுப்போய்விட்டது சென்னையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

உலகில் வெகுசில புத்தகங்களே அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதில் ‘கம்யூனிஸ்ட் கட்சி  அறிக்கை’யும் ஒன்றாகும். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும்  இந்தப்புத்தகம் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. கம்யூனிஸ்ட்டாக இருப்பவர்கள் அனைவரும் இந்த புத்த கத்தைக் கண்டிப்பாகப் படித்திருக்கவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தெரிந்து கொள்ளாமல் ஒருவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. ஒவ்வொரு முறை இந்த புத்தகத்தைப் படிக்கும்  போதும் புதிதாக ஒன்றை நாம் தெரிந்துகொள்ளமுடியும். இதிலிருந்து  கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு நாம் நமது அறிவை பெருக்கிக்கொள்ளமுடியும்.  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோ ரின் பிரகடனம் மட்டுமல்ல; அது அறிவியல் பூர்வமானதும், மனித குலம், நாகரீகம் எவ்வாறு தோன்றியது, வர்க்க, பேதமற்ற சமூகத்தை  எப்படிப் படைக்க முடியும் என்பதையும் உலகிற்கு எடுத்துரைக்கும் புத்தகம் ஆகும். மனிதனை மனிதன் சுரண்டாமல் ஒரு சமூகத்தை எப்படி அமைக்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் புத்தகமும் ஆகும். வர்க்க பேதமற்ற சமூக முறையை அமைப்பதற்கு முன்பு  இந்த மனிதகுலம் அடிமைமுறை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்து வத்தைக் கடந்து வரவேண்டியுள்ளது.

நவீன சுரண்டல் முறை

நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தவறிவிட்டன. முதலாளித்துவம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. உழைக்கும் மக்களிடம் சோசலிச சிந்தனைகள் செல்வாக்கு பெற்றுவிடக்கூடாது என்பதற்கா கத்தான் உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் ஓய்வூதி யம், முதியோர் பாதுகாப்பு, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்ற சில சமூகநலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின. சோவியத் யூனியனில் சோசலிச அரசு  இருந்தபோது அதன் தாக்கத்தால் பல நாடுகளில் மக்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் சோவி யத் யூனியன் மறைந்து அதற்கான நிர்ப்பந்தம் குறைந்தவுடன் பல  நாடுகளில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் என்ற  பெயரில் நவீன சுரண்டல் முறை வந்துவிட்டது.  பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் அடிக்கடி “அர சாங்கம் என்பது ஆட்சி செய்யத்தானே, தவிர நிறுவனங்களை நடத்த  அல்ல’’ என்று கூறுவார். அதாவது பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கவேண்டும் என்றார். ரயில்வே, பேருந்து, தபால் உள்ளிட்ட அனைத்தும் தனியாரிடம்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதைத்தான் இன்றைய அரசு கள் செய்து கொண்டிருக்கின்றன. தில்லியில் காற்று மாசு ஏற்பட்ட போது நல்ல காற்றை புட்டியில் அடைத்து விற்கும் நிலையை முத லாளித்துவ அரசுகள் ஏற்படுத்திவிட்டன. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அம லுக்கு வந்த பின்னர் பணக்காரன் - ஏழைகள் இடையிலான இடை வெளி அதிகரித்து விட்டது.வேலையின்மை அதிகரித்து விட்டது. இந்த  மோசமான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்வுகள் கம்யூனிஸ்ட் அறிக்கையில்தான் உள்ளன.
 

(சென்னை புத்தக காட்சியில் பாரதி புத்தகாலயம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒரு லட்சமாவது பிரதியை வெளியிட்டு விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது.)