நாமக்கல், ஏப்.20- அடுத்த ஆறு மாத காலத்திற்கு சுங்கவரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசு களுக்கு லாரி உரிமையாளர்கள் சங் கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கார ணமாக நாட்டில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு, பிறகு நீட்டிக்கப்பட்டுள் ளதால் பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களுக்கு அத்தி யாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மத்திய அரசு கேட்டு கொண்டதை தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் குறை வான கனரக வாகனங்கள் அத்தியாவ சிய சரக்கு போக்குவரத்திற்காக கடும் சிரமங்களுக்கு இடையில் தமிழ கத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டன. இந்த நிலையில் ஏப்ரல் 20ம் தேதி முதல் நாடு முழுவ தும் சுங்கச்சாவடிகளை இயக்க மத் திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக ஏற்கனவே இயக்கப்பட்ட வாகனங்க ளுக்கு வட மாநிலங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் லொடு ஏற்றப்படா மல் காத்திருக்கும் சூழலும், தமிழ கத்தில் இருந்து வட மாநிலங்க ளுக்கு காலியாக செல்ல வேண்டிய நிலையே உள்ளது.
எனவே சரக்கு வாகனங்களை இயக்குவதில் பல்வேறு இன்னல்கள் உள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டண வசூல் வாகன உரிமையாளர்க ளுக்கு கடும் நிதி சுமையை உண்டாக்கு வதோடு, வாகனங்களை இயக்க முடி யாத நிலைக்கு கொண்டு செல்லும். மேலும் திருத்தி அமைக்கப்பட்ட கட்டண வசூல் முதல் அமல்படுத் தப்பட உள்ளதாக சுங்கச்சாவடி நிறு வனங்கள் தெரிவித்து உள்ளன. எனவே சுங்கச்சாவடி கட்டண வசூலை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.