tamilnadu

img

கீழணைக்கு அருகில் ரூ. 650 கோடியில் சிறிய அணை: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 18- தமிழக சட்டப்பேரவையில் புத னன்று(மார்ச் 18) பொதுப் பணி மற்றும்  நெடுஞ்சாலை துறைகளின் மானியக்  கோரிக்கை நடைபெற்ற விவாதங்க ளுக்கு பதில் அளித்தும் புதிய அறி விப்புகளை வெளியிட்டும் பேசிய முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி,“ வேதார ணயம், நாகப்பட்டினம், தேனியில் கூடுத லாக ஒரு அரசு சுற்றுலா மாளிகை கட்ட டங்கள் ரூ.10 கோடியில் கட்டப்படும்” என்றார். சேலம் மாவட்டம் மேட்டூர், திருச்சி முக்கொம்பு, தஞ்சை கல்லணை, திரு வண்ணாமலை சாத்தனூர், நெல்லை மணிமுத்தாறு, கோவை ஆழியாறு, மதுரை வைகை, திருப்பூர் அமராவதி, ஈரோடு பவானி, கிருஷ்ணகிரி ஆகிய பத்து மாவட்ட நீர்த் தேக்கங்கள், அணைகளில் உள்ள பூங்காங்களை சீர்படுத்தி உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைக்கும் பணிகளுக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே  அமைந்துள்ள கீழணைக்கு அருகில் புதிதாக நீரொழுங்கி ரூ.650 கோடியில் அமைக்கப்படும்.  தருமபுரி மாவட்ட தென்பெண்ணை யாற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து மழைக் காலங்களில் வரும் வெள்ள உபரி நீரை அரூர், பாப்பிரெட்டிபட்டி, மொரப்பூர் வட்டங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு நீரேற்று திட்டத்  தின் மூலம் நீர் வழங்கும் பணி ரூ.300  கோடியில் நிறைவேற்றப்படும். குமரி  மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் பழை யாற்று நீரை இராதாபுரம் கால்வாய்க்கு  கொண்டு செல்லும் பணி ரூ.160 கோடியி லும் நீரேற்று நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்த கம் ஏரியை ஆழப்படுத்தி அதன் கரை களை பலப்படுத்தும் பணி மற்றும் மதகுகளை மறுசீரமைக்கும் பணி ரூ.125 கோடியில் நடைபெறும். கடலூர்  மாவட்டம் பெருமாள் ஏரியின் கொள்ள ளவை மேம்படுத்த ரூ. 120 கோடியும்,  புனகிரி வட்டம் கிரிமேடு கிராமத்தி லுள்ள வாலாஜா ஏரியின் கொள்ள ளவை மேம்படுத்த ரூ. 45 கோடியும் ஒதுக்கப்படும். சென்னை மாதவரம் ஏரியின் கொள்ளளவை ரூ.12.கோடி 90 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என வும் முதலமைச்சர் எடப்பாடி கூறினார்.