tamilnadu

img

குடும்ப அட்டைக்கு ரூ.1000 நிவாரணம்

முதல்வர்  அறிவிப்பு

சென்னை, மார்ச் 24- கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை காலை 10  மணிக்கு கூடியதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவ டிக்கைகள் குறித்தும் அரசு எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கை களையும் விரிவாக விளக்கிய முதல மைச்சர் மார்ச் 23 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அம்  மனுக்கு வருவதையும் சுட்டிக் காட்டி னார்.

இதனால் தினக் கூலிகள், விவ சாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர், கார்  ஓட்டுநர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடை பாதை வியாபாரிகள் முதியோர் உள்ளிட்ட பொது மக்களின் வாழ்வா தாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் சிரமங்களைக் உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவார ணம் வழங்க அரசு 3780 கோடி ரூபாய்  மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவி களை வழங்க உத்தரவு பிறப்பிக் கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவா ரணம் வழங்கப்படும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் ஏப்ரல்  மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் சமையல் எண்ணெய் சர்க்  கரை அனைத்தும் விலை இன்றி இல வசமாக வழங்கப்படும் என்றும் நியாய  விலைக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்த நிவாரணம் டோக்கன் முறையில் ஒதுக்கப்பட்ட நாளில் நேரத்  தில் வழங்கப்படும் இந்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் விலை யில்லா பொருட்களை பெற விருப்பம்  இல்லாதவர்கள் இதற்கான வலை தளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான அதிக பொருட்களை வாங்க தவறி இருப்பின் ஏப்ரல் மாதத்திற்கான பொருளுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழி லாளர்கள் குடும்பத்திற்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 ரூபாயும், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு,  ஒரு கிலோ சமையல் எண்ணெய்யும் வழங்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15  கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ஒரு  கிலோ சமையல் எண்ணெய் வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுக் கூடங்கள்

அம்மா உணவகத்தின் மூலமாக  சூடான சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும் எந்த வசதி யும் இல்லாதோர், ஆதரவற்றோர் ஆகி யோருக்கு அவர்கள் இருக்கும் இடத்தி லேயே சூடான சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்  படும் இதற்கு தேவைக்கேற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க சென்னை மாநகராட்சியால் இருக்கும் பிற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. முதியோர் களுக்கு தேவையான உணவை அவர்கள் வசிக்கும் இடங்களில் வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

பதிவு செய்யப்பட்ட நடை பாதை வியாபாரிகளுக்கு பொது வினி யோகத் திட்டத்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 1000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்  கப்படும். மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  இந்த மாதத்தில் பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு இரண்டு நாட்க ளுக்கான ஊதியம் சிறப்பு ஊதியம் ஆக கூடுதலாக வழங்கப்படும் எனவும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.