மதுரை, ஏப்.10- கொரோனா பரவலிலிருந்து காவல்து றையினர், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பாதுகாப்பதற்காக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் தமது உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு லட்சம் முகக் கவசங்களை வெள்ளியன்று வழங்கினார்.
மதுரை காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்திடம் மதுரை மாநகர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு 18 ஆயிரம் முகக்கவசங்களையும். புறநகர் பகுதியில் பணியாற்றும் காவலர்களுக்கு 12 ஆயிரம் முககாவசங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோரிடம் வழங்கினார். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையார் சா. விசாகனிடம் மாநகராட்சி பணியாளர்களுக்கு 60 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கினார். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பிரியராஜிடம் சுகாதாரப் பணியாளர்களுக்கு 10 ஆயிரம் முகக்காவசங்களை வழங்கினார். முகக்கவசத்தின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்க தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் உடனிரு்ந்தனர்.