சென்னை, மே 1- தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்று தொற்றுநோயியல் துறை விஞ்ஞானியும், மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்தவரு மான பிரதீப் கவுர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் களிடம் பேசிய மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்த பிரதீப் கவுர், தமிழகத்தில் தற்போ திருக்கும் சூழ்நிலையில், ஊரடங்கு தளர்த் தப்பட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார். மேலும் அவர் பேசுகையில், சில இடங்க ளில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த ஆலோசனை வழங்கியுள் ளோம். ஊர டங்கைத் தளர்த்தினாலும், சமூக இடை வெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்று நீண்ட நாட்களுக்கு நம்மு டன் இருக்கும் என்றும் கூறினார்.
கொரோனா தொற்றில் இருந்து தற்காத் துக் கொள்ள, தனிமனித இடைவெளி அவ சியம். முகக் கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பரிசோத னையை அதிகரித்தால் நாம் அதிகளவில் கொரோனா பாதித்தவர்களைக் கண்டறிய முடியும். கடந்த வாரத்தில் பரிசோதனை அதி கரிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் பிரதீப் கவுர் கூறியுள்ளார்.