மதுரை மாவட்டத்தில் நிவாரணப் பணிகளோடு, வீடுகளில் முடங்கி இருக்கும் குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பல்வேறு வகையான போட்டிகளை ஆன்லைன் மூலம் நடத்தினார். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெற்றோர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் முடிவுகளை அறிவித்தும், கொரோனா பாதிப்புக்கு எதிரான போராட்டத்தை உறுதியோடு முன்னெடுப்போம் என்று அழைப்பு விடுத்தும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் தமது டிவிட்டர் பக்கத்தில் திங்கள் (மே 4) காலை 11.30 மணிக்கு பதிவிடுகிறார்.